Thursday, August 14, 2008

படித்ததில் பிடித்தது

தொட்டுப் பேசுவது நட்புக்கு அழகாம்
தொடாமல் பேசுவது காதலுக்கு அழகாம்
நம் கண்கள் நான்கும் காதலில் இருக்க‌
உதடுகள் மட்டும் நட்பிலேயே இருப்பது ஏன்?

--------------------------------------------------------------

எனக்கு
கவிதை
எழுதத் தான்
தெரியும்

உன்னை
போல
கவிதையாகவே
இருக்கத் தெரியாது

---------------------------------------------------------------

ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது
‍'ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது?' என்று!

---------------------------------------------------------------

அடிக்கிற கைகள் எல்லாம்
அணைக்குமா என்பது தெரியாது.
ஆனால் நீ அடிப்பதே
அணைப்பது மாதிரிதான் இருக்கிறது.

---------------------------------------------------------------

உனக்கு வாங்கி வந்த
நகையைப் பார்த்து
'அய்... எனக்கா இந்த நகை'
என்று கத்தினாய்.
நகையோ,
'அய்... எனக்கா இந்தச் சிலை'
என்று கத்திய‌து.

Labels:

Friday, June 15, 2007

கவிதை!

கவிதை!
ஆளை மயக்கும்
என தெரிந்தே
ஆசையில்
அள்ளிப் பருகும்
மருந்து.

Labels:

நானும் காதலிக்கிறேன்!

காதலித்தால் தான்
கவிதை வருமாம்

நானும் காதலிக்கிறேன்
கவிதைகளை

ஆம்,
என் கவிதை காதலி
எனக்கு கிடைக்க‌
எப்பொழுதும் அலைந்து
கொண்டிருகிறேன்
க‌விதைகளை தோன்றவைக்கும்
காத‌லியை தேடி!

Labels:

Monday, May 21, 2007

இது என்ன நியாயம்?

நான் ஒரு நாள் பேசவில்லை என்று கோபித்து கொண்டு
நீ இனிமேல் என்னிடம் பேசமாட்டேன் என்றாய்

நான் உன்னை ஒரு நாள் தண்டித்தால்
நீ பதிலுக்கு என்னை பல நாள் தண்டிப்பேன் என்றாய்

சரி,

நான் உனக்கு ஆசையில் ஒரு முத்தமிட்டால்
நீ பதிலுக்கு எனக்கு பல முத்தங்கள் இடுவாயா? என்றேன்

சீ.. போடா உனக்கு வேற வேலையே இல்லை என்றாய்
இது என்ன நியாயம்?

Labels:

Thursday, May 17, 2007

என்னுடைய‌ முத‌ல் முயற்சி

நான் ஆசையாய்
பேசும் பொழுதுகளில்
நீ
கோப‌மாய்
விரட்டுகிறாய்

நான் கோப‌மாய்
போகும் பொழுதுகளில்
நீ
ஆசையாய்
அழைக்கிறாய்

Labels: